வவுனியா, மூனாமடுவில் இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை வழங்குமாறு பிக்கு ஒருவர் வவுனியா மாவட்டச் செயலகத்தைக் கோரியுள்ளார்.
வவுனியா, மூனாமடுவில் உள்ள நாகபூஷணி அம்மன் ஆலயம் நீண்ட காலமாக அப் பகுதி மக்கள் மற்றும் விசாயிகளின் வழிபாட்டுத் தெய்வமாக இருந்துள்ளது.
வவுனியா மூனாமடு மற்றும் பேயாடிக்கூழாங்குளம் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் காலாகாலமாக விவசாயத்தை மேற்கொண்டு வந்தனர்.
அவர்கள் வயல் அறுவடைக் காலங்களில் அந்நிலங்களிற்கு அண்மையில் இயற்கை விவசாயத்தினை பாதுகாக்கும் இவ் நாகபூஷணி அமைத்து வழிபட்டோடு மட்டுமல்லாமல் அவற்றில் இளைப்பாறும் இடங்களையும் உருவாக்கி தமது தொழிலினை செய்தனர். விளைச்சலின் பின் பொங்கல் செய்தும் வழிபட்டு வந்தனர்.
1995 ஆம் ஆண்டு அப்பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதன் பின் இராணுவத்தினர் தாம் அமைத்த இராணுவ முகாமில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்தனர்.
ஆனால் தற்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட போதும் அந்தப் புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்படவில்லை.
இந்த நிலையில், வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர் குறித்த புத்தர் சிலை அமைந்துள்ள காணியை ஒப்படைக்கும்படி மாவட்டச் செயலகத்தை கோரியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment