சிவராத்திரியை முன்னிட்டு பரதத்தில் கின்னஸ் சாதனை!!!

இந்தியாவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 8000 பரதகலைஞர்கள் கலந்து கொண்டு ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி தற்போது உலக சாதனை என உலக கின்னஸ் சாதனை ஒருங்கிணைப்பாளர்  ரிஸிநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டிய நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தில்லை நாட்டியாஞ்சலி சார்பாக நடைபெற்று வருகின்றது. 
இந்த ஆண்டும் நடேச கவுத்துவம் உலக கின்னஸ் சாதனை  நிகழ்ச்சிக்காக நாட்டின் பிற  மாநில ங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடினாரகள்.

இது குறித்து லண்டனில் இருந்து உலக கின்னஸ் சாதனை ஒருங்கிணைப்பாளர் ரிஸிநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது;

இதுவரை 4525 நபர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடியமை உலக சாதனையாக இருந்தது என்றும் இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் 8000 பரதகலைஞர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடியமை தற்போது உலக சாதனையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்னர் சென்னையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரத்து 525 நபர்கள் கலந்துக்கொண்டது இதுவரை சாதனையாக இருந்ததுவந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் இன்று சிதம்பரத்தில் நடைப்பெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment