கண்டன ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் கதவடைப்பு கவனவீர்ப்புப் போராட்டத்துக்கும் முழுமையான ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு - கிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளி நோக்கி கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனவீர்ப்பு பேரணி இடம்பெறவுள்ளது.
இதற்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment