ஹற்றன் டிக்கோயா பகுதியில் ரிவோல்வர் ஒன்று நேற்று மாலை மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹற்றன் பேருந்து நிலையத்திற்கு பின்பகுதியில் உள்ள மலசல கூடத்திற்கு அருகாமையில் குழியொன்று தோண்டும்போதே ரிவோல்வர் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த ரீவோல்வரை மீட்டுள்ளனர்.
மீட்கபட்ட ரிவோல்வர் நீண்டகாலம் பழமைவாய்ந்ததாகவும், துறுபிடித்த நிலையில் காணப்பட்டதோடு, ரிவோல்வரில் உள்ள இலக்கங்கள் அனைத்தும் அழிந்த நிலையிலேயே இருந்தவாறு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீவோல்வர் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment