தாயை காப்பாற்ற போராடிய மகனால் கண்ணீர் விட்டழுத நீதிவான்


தாயாருக்கு சிறுநீரகம் தானம் செய்ய அனுமதிக்கக் கோரி மகன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிபதி  கண்கலங்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் புதுச்சேரியில் நடந்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் வேணி என்பவருக்கு செந்தில் குமார் என்ற மகன் உள்ளார்.

வேணிக்கு சிறுநீரகங்கள் இரண்டும் செயலழந்துவிட்டதால், சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தாயின் நிலை  உணர்ந்த செந்தில், தன்னிடம் இருக்கும்  ஒரு சிறுநீரகத்தை அம்மாவுக்குத்  தானமாகக் கொடுக்க முன்வந்தார்.

இதற்கான தடையில்லா சான்றிதழையும் புதுச்சேரி குடும்பநல துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் பெற்றுள்ளார்.

இதையடுத்து உடல் உறுப்பு தானம் அங்கீகாரக்குழுவிடம் ஒப்புதல் பெற தனியார் மருத்துவமனை பரிந்துரை செய்தது. ஆனால், திருமணமான செந்தில்குமார், உறுப்பு தானம் வழங்க தன்னுடைய மனைவியின் ஒப்புதலை பெறவேண்டும் என்று அந்த குழு உத்தரவிட்டது.

அவருடைய மனைவியை பிரிந்து வாழ்வதால் செந்தில் குமாரால் ஒப்புதல் பெற முடியவில்லை.  இந்தக் காரணத்தை செந்தில் குமார் கூறிய போதும், அந்த குழு உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்து விட்டது.

 அம்மாவின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனுத் தாக்கல் செய்தார்.

”எனது தாயார் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். எனது ஒரு சிறுநீரகத்தைத் தானமாக தர ஒப்புதல் வழங்கும்படி உடல் உறுப்பு தானம் அங்கீகாரக்குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கின் விசாரணை நீதிமன்றில் நேற்றையதினம் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,  செந்திலின் தாயார் நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாக மனுதாரர் தரப்பு வக்கீல் கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், உறுப்பு தானம் வழங்க ஏன் அவருக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது? மனுதாரரின் மனைவி அவருடன் தற்போது இல்லை. அப்படி இருக்கும்போது மனைவியின் சம்மதத்தை மனுதாரர் எப்படி பெறுவார்? என்று அரசு தரப்பு வக்கீலைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.  

 மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பைப் பிறப்பிப்பதாகக் கூறி, தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய போது, ஒரு கட்டத்தில் நீதிபதியே உண்ர்ச்சியை அடக்க முடியாமல் கண் கலங்கி விட்டார்.

இதனால் சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், அதன் பின் தன்னை அங்கிருந்த கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபாலை பார்த்து, இந்த வழக்கில் அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கிறேன்.

ஆனால், இப்போது, என்னால் உத்தரவிட முடியவில்லை. மனுதாரரிடம் மனுவை வாங்கி அரசே நல்ல முடிவை எடுத்து அவருக்கு உதவுங்கள் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.

 உணர்ச்சிபூர்வமான இந்த நிகழ்வு நீதிமன்றில்  பல நிமிடங்கள் அமைதியை ஏற்படுத்தியது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment