கலப்பு நீதிமன்றம் பற்றி எவரும் வாய்திறக்க முடியாது - கொந்தளிக்கும் மைத்திரி
வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் இங்கு இனிமேல் எவரும் பேசவே முடியாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஜெனிவா மாநாட்டில் வைத்தே இலங்கைக் குழு நிராகரித்துவிட்டது. இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு ஜெனிவாவில் மூன்றாவது முறையும் இணக்கம் வெளியிட்டுள்ளது.
கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு அமைக்கத் தவறினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் வெளிநாட்டுச் செய்திச் சேவை ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்தார்.
#Maithripala #SrilankaPolitics #WarCrimes #UNHRC #HumanRightsCouncil2019 #HumanRights #TamilNewsKing
0 comments:
Post a Comment