சமையலறைக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்

சமையல் அறையொன்றிலிருந்து,  பல பாம்புக் குட்டிகள் உயிருடன் பிடிபட்ட சம்பவம் அப் பகுதியெங்கும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி தர்மாபுரி நடுத்தெரு பகுதியிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்தே 27 பாம்பு குட்டிகள் உயிருடன் பிடிபட்டது.
  
ராஜேஷ்கண்ணா என்பவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டு குளியல் அறையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சுவற்றில் இருந்த ஒரு துவாரத்தின் வழியே பாம்புக் குட்டி ஒன்று வெளியேறியுள்ளது.  அதை, அடித்துக் கொன்றுள்ளார். 

அதே துவாரத்தில் இருந்து மேலும் நான்கு பாம்புக் குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், அவற்றையும் அடித்துக் கொன்றுள்ளார்.

மேலும் பாம்பு குட்டிகள் இருக்கலாம் என்ற அச்சத்தில்,  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை ஊழியர்கள் வந்து, பாம்பு குட்டிகள் வெளிவந்த சுவற்றின் துவாரத்தை துழையிட்டுள்ளனர். 

குளியல் அறையில் ஆரம்பித்த அந்த துவாரம், சமையல் அறை வரை நீண்டது. சமையல் அறையில் தோண்டத் தோண்ட, அடுத்தடுத்து பாம்பு குட்டிகள் வெளியேறின. இப்படி வெளிவந்த 27 பாம்பு குட்டிகளை வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.

முழுவதுமாக தோண்டிய நிலையில், சமையல் அறைக்கு கீழே உள்ள பள்ளத்தில் தாய் பாம்பு முட்டைகள் இட்டிருந்ததும், அந்த முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளியேறியதும் தெரிய வந்தது. பொரிக்காத சில முட்டைகளும் அங்கு இருந்தன. 

அவற்றையும் வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். “பிடிபட்ட பாம்பு குட்டிகள் அனைத்தும், விஷத் தன்மையற்ற நீர் சாரைப் பாம்பு வகையைச் சேர்ந்தது” என்று வனத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment