கிராமத்திற்கும் சமய தாபனங்களுக்கும் மத்தியிலான உறவை பாதுகாப்பதனூடாகவே சிறந்ததோர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வடமத்திய மாகாண தலைமை சங்க நாயக்கர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சங்கைக்குரிய கல்லேல்லே ஆரியவங்ச நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
கடந்த சில வருடங்களாக நாட்டின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதுபோன்று ஆன்மீக அபிவிருத்திக்காகவும் விரிவான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
கிராமிய விகாரைகளைப் புனரமைத்து நாட்டில் பௌத்த சமய எழுச்சியை ஏற்படுத்துவதே இந்த நாட்டு பெளத்த மக்கள் பெற்ற வெற்றியாகும். என்றார்.
உடரட்ட அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய நுவரெலியே சந்ரஜோதி நாயக்க தேரர், அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலன்னே, முன்னாள் அமைச்சர் சிறிபால கம்லத், பொலன்னறுவை நகரபிதா சானக்க சிதத் ரணசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment