மருத்துவர்களால் மறுவாழ்வு ; வேலூரில் சம்பவம்

இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெத்தேந்தர் பர்மன். இவருக்கு ராகுல் என்ற ஐந்து வயது மகன் உள்ளார்.

சமீபத்தில்  இவர் தமிழகத்தின் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்வதற்காக போபாலிலிருந்து தொடருந்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் ஜெத்தேந்தர் சென்று கொண்டிருந்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை தொடருந்து கடந்தபோது, சிறுவன் ராகுலுக்கு திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. 

அடுத்த சில நொடியில் சிறுவனின் மூக்கில் இரத்தம் வழிந்தது. அதன் பின் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளான்.

இதனால் தொடருந்து பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சிறுவனை மீட்டு  வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள்  சிறுவனுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அபாயக் கட்டத்தை எட்டியிருப்பதால் உயிர்பிழைப்பது கடினம். 10 சதவிகிதம் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பிருப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் ராகுல் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவமனை டீன் சாந்திமலர் மேற்பார்வையில், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மருத்துவர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனைத் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிறுவன் ராகுல் குணமடைந்துள்ளான். இன்னும் சில நாள்கள், சிகிச்சை பெற்றபின்னர், சிறுவன் வீட்டுக்குச் செல்லலாம் என்று  என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

10 சதவீதமே உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்ட சிறுவனை மருத்துவர்கள் காப்பாற்றியதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment