மின்சார விநியோகத்தில் தொடர்ந்தும் சிக்கல் நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் தற்போதைய சீர்செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இதனை தேசிய அமைப்புடன் இணைப்பதற்கு மேலும் காலதாமதம் ஏற்படும் என சக்தி வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் முடிவதற்குள் அதனை தேசிய தேசிய அமைப்புடன் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட இந்த தொழிநுட்பக் கோளாறால் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் முதல் தற்போதுவரை விட்டு விட்டு மின்சாரத் தடை ஏற்படுகிறது.
இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment