அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப் பகுதி ரசிகர்கள் விஜய்யை காண திரண்டு வருகிறார்கள். அப்படி தன்னை சந்திக்க வரும் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடி செல்கிறாராம் விஜய்.
இந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு விஜய் புறப்படும்போதும் வழக்கம்போல் ஏராளமான ரசிகர்கள் செட்டிற்கு வெளியே கூடியிருந்தார்கள்.
விஜய்யைக் கண்டதும் அவர்கள் பலத்த ஆரவாரம் செய்தார்கள். இதனால் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடி அவர்களை நோக்கிச் சென்றுள்ளார் விஜய்.
சந்தோசத்தில் ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி கீழே சரிந்தது.
இதனைக் கண்ட விஜய், வேலியை தனது கைகளால் தடுத்து நிறுத்தினார். அவருடன் சென்ற மற்றவர்களும் சேர்ந்து அந்த வேலியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment