கனடாவில் சாலை விபத்து - சாரதிக்கு அதி உயர் தண்டனை!!



கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பஸ் நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த டிரக், பஸ்சின் மீது  வேகமாக மோதியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக டிரக் ஒட்டுனர் ஜஸ்கிரத் சிங் சித்து (இந்தியர்) மீது பாதிக்கப்பட்டார்களின் குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும், அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்த நிலையில், நீதிபதி இனிஸ் கார்டினல் நேற்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: 





இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த வழக்கின் முக்கிய ஆவணமான, விபத்து நடந்த பகுதியின் தடயவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களில், எவ்வித இயற்கை காரணிகளும் இவ்விபத்துக்கு காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.  சித்து நெடுஞ்சாலையின் குறியீடுகளை சரியாக பின்பற்றப்படவில்லை. 

இவ்விபத்தை சித்துவால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமலும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமலும் அலட்சியமாக வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் இந்த கோரச்சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விபத்துக்கு காரணமான சித்துவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment