மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிவிட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மணல் கடத்தல் இன்று சனிக்கிழமை அதிகாலை முறியடிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அரியாலை பூம்புகார் பகுதியில் நள்ளிரவு வேளையில் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் அதுதொடர்பில் யாழ்.பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பூங்புகார் பகுதியில் நேற்று நள்ளிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டு குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment