நீதி நூல் தொகுப்புக்களின் அறிமுக விழா யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைகளத்தின் ஏற்பாட்டில் யாழ்.நீராவியாடியில் உள்ள இலங்கை வேந்தன் மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கைச் சேர்ந்த அற நெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு நீதி நூல்களின் தொகுப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் நல்லை ஆதின குருமுதல்வர், தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தலைவர் ஆறு.திருமுருகன், இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்,யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன். அற நெறி பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment