மோட்டார் சைக்கிள் உழவியந்திரத்துடன் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் பூநகரி பகுதியில் நடந்துள்ளது.
மன்னாரிலிருந்து யாழ்பாணத்துக்கு வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment