இலங்கைக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, தென்னாபிரிக்கா அணி 3 க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
2 போட்டிகள் மிதமுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி டக்வர்த் லூயின்ஸ் முறைப்படி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் குயின்டன் டி கொக் 121 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
தமது வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடிய நிலையில், மழை குறுக்கிட்டது.
தொடர்ந்தும் மழை பெய்தமையினால், இலங்கை அணிக்கு 24 ஓவர்களில் 193 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
0 comments:
Post a Comment