நாடாளுமன்றில் பிரதமர் சாப்பிட்ட தாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டிய சம்பவத்தால் நாடாளுமன்றமே கலகலத்தது.
இந்த இந்த சுவாரஷ்ய சம்பவம் கனேடிய நாடாளுமன்றில் நடந்துள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ரூடே bagel எனப்படும் உணவை தனது டெஸ்குக்கு அடியில் ஒளித்து வைத்து சாப்பிட்டதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Scott Reid குற்றம் சாட்டினார்.
சபாநாயகரிடம் குற்றம் சாட்டிய Scott, அவையில் உணவு உண்ணக்கூடாது என்ற விதியை மீறி, பலர் உணவு உண்பதாகவும், அவர்களில் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஒருவர் என்றும் கூறினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனது டெஸ்கின் அடியில் மறைத்து வைத்து, bagel எனப்படும் உணவை சாப்பிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, நாடாளுமன்றில் பலத்த கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
சபாநாயகரும், பிரதமர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேட்டுள்ளார்.
இதன்போது எழுந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எழுந்திருந்து, மன்னிக்க வேண்டும் சபாநாயகர் அவர்களே, நான் சாப்பிட்டது உண்மைதான், ஆனால் நான் சாப்பிட்டது ஒரு சாக்லேட் பார் , அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூற அவையே கலகலத்தது.
0 comments:
Post a Comment