பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

பழம்பெரும் நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவு  காராணமாக தனது 83 ஆவது வயதில் இன்று காலமாகி விட்டார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் குசலகுமாரி.

மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

 250 படங்களுக்கு மேல் நடனமாடி இருக்கிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனது தம்பி சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

குசலகுமாரி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment