நேற்று அதிகாலை மாவனெல்ல பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், அமைச்சர் கபீர் ஹாசீமின் இணைப்புச் செயலாளரான மொஹமட் ரஸாக் தஸ்லீம் என இனங்காணப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாவனெல்லப் பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பல தகவல்களை வழங்கியுள்ளாரெனவும், இவரது தகவலுக்கமையவே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில், அமைச்சர் கபீர் ஹாசீமுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சம்பவம் குறித்த விபரங்களை அறிந்துக்கொண்டதாகவும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment