ஆடை விற்பனை நிலையத்திற்கு வந்த பெண்கள் இருவர் அங்கிருந்து கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் மாத்தறை நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடை விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வந்த இளைஞர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியே திருடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவை பரிசோதித்த வேளையே இந்த திருட்டு சம்பவம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் குறித்த பெண்களைத் தேடி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment