ஆட்சியாளர்களை நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது !!!
வரவு செலவுத் திட்டத்திற்கு டிலான் பெரேரா பதில்...
இந்த ஆட்சியார்களை நம்பி வாக்களித்த தோட்டத்தொழிலாளர்களுக்கு கொடுப்பனவும் இல்லாத, நாட்டு மக்களுக்கு அபிவிருத்தியும் இல்லாத ஆட்சியே இந்த நான்கு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டம் வெறுமனே தேர்தலை இலக்குவைத்த ஒன்றென எதிர்க்கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தில் வரவு இல்லை வெறுமனே கடன் மட்டுமே உள்ளது. ஆகவே வரவு இல்லாத கடன் செலவு திட்டமே இதுவாகும். 52 நாட்களில் நாங்கள் கொடுத்த சலுகைகூட இந்த வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை. குறுகிய காலத்தில் நாங்கள் கொடுத்த சலுகைகள் கொண்டே இன்றுவரை விவசாயிகள் செயற்பட்டு வருகின்றனர்.
அதேபோல் தோட்டத்தொழிலாளர் சம்பள பிரச்சினையில் அவர்களுக்கு 900 ரூபாவை கொடுக்கும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கான வாய்ப்புகள் இருந்தது, நாம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். எனினும் நல்லாட்சியில் தலைவர்கள் 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கூறி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க கூறினார்கள்.
இதேபோன்று மத்திய வங்கியின் பிணை முறி மோசடியால் ஏற்பட்ட நட்டம் தொடர்ந்தும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துவதன் காரணமாக வரவுசெலவுதிட்டத்தின் மூலம் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆனால் இன்று தோட்டத்தொழிலாளருக்கு சம்பள கொடுப்பனவுகளும் இல்லை அபிவிருத்தியும் இல்லை. இறுதியாக வரவு செலவு திட்டத்தில் மக்களை ஏமாற்றக்கூட அவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவோம் என கூறவில்லை. எதிர்பார்ப்புகளுடன் இருந்த தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. எனத் தெரிவித்தார்.
2019 ஆண்டின் வரவுசெலவுதிட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் கையூட்டலாக அரசாங்க சேவையாளர்களுக்கு 2500 ரூபா வேதன அதிகரிப்பை வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருந்தோட்ட விவகாரம் தொடர்பான கருத்தாடல்களை முன்வைக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள
இதேவேளை, இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
#DilanPerera #SusilPremajayantha #Budget2019 #SrilankaParliament #ParliamentCrisis #Government #ParliamentToday #FinanceMinistry #BudgetSrilanka #Ministers #SrilankaMP #MThilakaraj #TamilNewsKing
#DilanPerera #SusilPremajayantha #Budget2019 #SrilankaParliament #ParliamentCrisis #Government #ParliamentToday #FinanceMinistry #BudgetSrilanka #Ministers #SrilankaMP #MThilakaraj #TamilNewsKing
0 comments:
Post a Comment