மணிரத்னத்தின் சைக்கோ படத்தில் நடித்து வருகிறார் அதிதிராவ். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த இரண்டு படங்களுமே தெலுங்கிலும் வெளியானது.
கடந்த ஆண்டில் சம்மோஹனம் என்ற தெலுங்கு படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தார் அதிதிராவ்.
இந்தப் படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு ஏராளமான ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், நாளிதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆண்டில் அதிகமான ரசிகர்கள் விரும்பிய பெண் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அதிதிராவ்.
கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடம் பிடித்து வந்த சமந்தா இந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment