மணமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியுள்ள சம்பவம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்த பசவண்ணா கொள்கையின்படி, நேற்று இரு திருமணங்கள் விஜயபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
பசவண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் திருமணத்தின் போது வேத மந்திரங்கள் ஓதமாட்டார்கள்.
கன்னியாதானம், அட்சதை தூவுவது போன்றவற்றையும் இவர்கள் செய்ய மாட்டார்கள்.
இங்கு பெண் என்பவள் ஆணுக்கு நிகர் எனக் கருதப்படுவதால், தாலி காட்டும் முறைகூட மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படி பிரபுரா- அங்கிதா, அமித் -பிரியா ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திருமணத்தில் இரண்டு மணப்பெண்களும் தங்களுடைய கணவருக்கு தாலி கட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
0 comments:
Post a Comment