சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பிக்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16 ஆம் திகதி தொடங்குகிறது.
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் 23 ஆம் திகதி தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்கான டிக்கெட் விற்பனை 16 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இணையத்தள டிக்கெட் விற்பனை காலை 11.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று டிஎன்சிஏ மூலம் கவுண்டர் டிக்கெட் விற்பனையும் 11.30 மணிக்கு ஆரம்பமாகும்.
சி, டி மற்றும் ,இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500 விலையில் விற்பனையாகிறது.
இந்த நிலையில் மீதமுள்ள சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment