தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே ஒரு முனையில் கணவர் விஷம் குடித்த நிலையில் மறு முனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்திய கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ள இந்தச்சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஷோக். என்பவருக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
நேற்று முன் தினம் திருமண நிகழ்ச்சிக்கு போவதாக கூறிவிட்டு அஷோக் வெளியில் சென்றுள்ளார்.
கணவர் வெளியில் செல்வதை ரஞ்சிதா விரும்பவில்லை. இந்த நிலையில் போன இடத்திலிருந்து அஷோக், ரஞ்சிதாவுக்கு போன் செய்தார்.
அப்போது இருவரும் தொலைபேசியிலேயே வாக்குவாதம் செய்த போது திடீரென அஷோக் விஷம் குடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து மன வருத்தத்தில் இருந்த ரஞ்சிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்த அஷோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அஷோக் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் தான் ரஞ்சிதா தற்கொலை செய்தார் என அவர் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் கூறுகையில், தம்பதியின் இந்த செயலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம், சிகிச்சையில் உள்ள அஷோக் கண்விழித்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறோம் என்றனர்.
0 comments:
Post a Comment