இரத்தினபுரியில் இரத்தினகற்கள் நிறைந்த புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரக்வான மஹபன்னில் என்ற பிரதேசத்தில் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இரத்தினகல் உள்ளதாக பலராலும் கூறப்பட்ட நிலையில், அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
அதற்கமைய அந்த சோதனையில் அங்கு இரத்தனக்கற்கள் அடங்கிய புதையல் உள்ளமைக்கான உறுதிபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான தகவல் அறிந்த கொள்ளையர்கள் அங்கு கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதையலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment