முச்சக்கரவண்டி மற்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து கிளிநொச்சி புதுக்காடு பகுதியில் இன்று நடந்துள்ளது.
விபத்தில் அறத்தி நகரைச் சேர்ந்த இளைஞனே காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி ஒன்றே டிப்பருடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment