ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்த பிரேரணை இன்று சபையில் விவாதிக்கப்படவுள்ளது.
பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட 5 நாடுகளின் அனுசரணையுடன் இப் பிரேரணை தயாரிக்கப்பட்டது.
நல்லிணக்கம், பொறுப்புகூறல், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை பின்பற்ற வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் குறித்து அந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை கனடா, ஜேர்மன், மெசிடேனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகியவற்றுடன் இணைந்து பிரித்தானியா முன்வைக்கிறது.
0 comments:
Post a Comment