கிளிநொச்சி பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் இன்று உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மருத்துவமனையருகில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்தநபர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்ட போது அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment