லிந்துலையில் கொள்ளை!



லிந்துலை காவல்துறை பிரிவுக்கு உட்பட 3 அம்மன் ஆலயங்களில் நேற்றிரவு ஆபரணங்கள் மற்றும் உண்டியல்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வளஹா, டீமலை மற்றும் மவுசெல்ல முதலான தோட்டங்களைத் சேர்ந்த ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்களில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த கொள்ளைச் சம்பவங்களின் போது கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பனவற்றின் பெறுமதி தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment