பாலியல் தொழில் செய்த திருநங்கை: இன்று என்ன செய்கிறார் தெரியுமா?



பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை ஒருவர் அதை கைவிட்டுவிட்டு சமூக சேவைகளில் ஈடுபட்ட பின்னர் தற்போது தலைமைச் செயலகத்தில் அரசு பணியில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மைசூரைச் சேர்ந்தவர் பாரிஷே கௌடா (28). திருநங்கையான இவர் தனது 13 வயதில் தனக்குள் நிகழ்ந்த உடல் ரீதியான மன ரீதியான மாற்றங்களால் தன்னைப் பெண்ணாக உணர்ந்தார்.
17 வயது வரை குடும்பத்துடன் இருந்த பாரிஷே அதற்கு பின்னர் கொஞ்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
நீண்ட தனது பயணத்துக்குப் பின் பெங்களூரு வந்த பாரிஷேவுக்கு கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. வாழ்க்கை நடத்துவற்கு, ஏதாவது வேலை செய்யவேண்டுமே என்ற கண்ணோட்டத்தில் பல இடங்களில் வேலை தேடினார்.
இவர் திருநங்கை என்பதால் வேலை கிடைக்கவில்லை. வேறுவழியின்றி மற்ற திருநங்கைகள் போலவே பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.
அதில் நிறைய பணம் சம்பாதித்தாலும் அதில் ஏற்பட்ட தொடர் மன உளைச்சல் காரணமாக பாலியல் தொழிலை கைவிட்டார். இதையடுத்து, பாலின சிறுபான்மையினருக்காக சேவையாற்றி வரும் ’பயணா’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
8 ஆண்டுகளுக்கு மேலாக இதே பணியைச் செய்து வந்தார் பாரிஷே. இதனால் இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைத்தது.
இந்நிலையில், இவரது சேவையை அறிந்த கர்நாடக அமைச்சர் ஜெயமாலா, பாரிஷேவை நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன், கர்நாடக தலைமைச் செயலகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்ற வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் கர்நாடக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பாரிஷே பெற்றுள்ளார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment