சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காலி - உனவதுன கடல் பகுதியில் வைத்து, தென்மாகாண கரையோர கடற்படையினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
உக்ரேயின் நாட்டை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்து, மீன்பிடிக்காக பயன்படுத்தும் சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment