தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடித்து வருகிறவர் யார்? என்ற கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லலாம் ஜி.வி.பிரகாஷ் என்று.
காதல் 100 சதவிகிதம், அயங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி, காதலை தேடி நித்யானந்தா, ரெட்டை கொம்பு என 8 படங்களில் நடித்து வருகிறார். இதுவரை தலைப்பு வைக்கப்படாத 9வது படத்திற்கு தற்போது காதலிக்க யாருமில்லை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இதனை கமல் பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். பிக்பாஸ் புகழ் ரெய்சா கதாநாயகி. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஊட்டியில் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்திற்கு காதலிக்க யாருமில்லை என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
விரைவில் இது முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது. ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தின் சாயலில் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment