மன்னார் தாழ்வுபாடு சனிவிலாச் கடற்படை முகாமை நிரந்தர கடற்படை முகாமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யுத்த காலத்திற்கு முன்னரே குறித்த கடற்படை முகாம் அமைக்கப்பட்டு தற்போது வரை தற்காலிக முகாமகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் முகாம் அமையப் பெற்றிருக்கும் காணியை நிரந்தரமாகப் பெற்று கடற்படை முகாம் அமைப்பதற்க்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கும் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் ஆறு ஏக்கர் காணி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்துக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதி அதிக மக்கள் செறிவாக வாழும் பகுதி என்பதால் கடற்படை இங்கிருந்து வெளியேற வேண்டும் என அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment