பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்டவாறு தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள தனது வீட்டில் விடியற்காலை 03 மணி அளவில் குறித்த சிறுமி கற்றல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளார். காலையில் சிறுமியின் சகோதரி எழும்பி வந்து பார்க்கும்போது தன் தங்கை தூக்கில் தொங்கியவாறு இருந்த நிலமையைக் கண்டு கூச்சலிட்டுள்ளார்.
தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொகவந்தலாவப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர்.
தூக்கில் தொங்கிய சிறுமியின கால்கள் இரண்டு கட்டபட்ட நிலையில் தனது வீட்டின் வெளிபகுதி கூரையின் தடியால் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாறு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கபட்ட சிறுமி பொகவந்தலாவ டின்சின் தமிழ் மாகாவித்தியால உயர் தர மாணவியாவார்.
சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்கு தடையவியல் பொலிஸார் மற்றும் ஹற்றன் நீதிமன்ற நீதவான் வரவளைக்கபட்டு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவும் கண்டறியபடாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#CrimeNews #Bohawantalawa #Investigation #WomensDay #Girls #Abuse #Suicide #Student #Arrest #TamilNewsKing
0 comments:
Post a Comment