கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், நடித்துள்ள படம் பூமராங். ரதன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
இன்றையதினம் வெளியாகிய இந்தப் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.
இப்படம் பற்றிய விஷயங்களை அறிந்து, நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் ரஜினி, கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன்.
ரஜினி உடனான சந்திப்பு குறித்து கண்ணன் கூறுகையில், "ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன்.
அரைமணிநேரம் பொறுமையாகவும், ஆழமாகவும் கேட்ட ரஜினி படத்தில் இடம்பெறும் நதிநீர் இணைப்பு பாடலையும், டிரைலரையும் பார்த்துவிட்டு "எக்சலண்ட்..." என்றார்.
0 comments:
Post a Comment