இலங்கை முழுவதும் அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் பல பாடசாலைகளில் அடையாள கவனவீர்ப்புப் போரட்டம் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 8 மணி முதல் 8.30 மணிவரை தமது பாடசாலைகளுக்கு முன்பாக கருப்பு பட்டி அணிந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019 ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும், ஆசிரியர்களின் மாண்பினை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

0 comments:
Post a Comment