ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வவுனியா புதிய பேரு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனை செய்தனர்.
இதன்போதே சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து, இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதுடையவர்கள் ஆவர்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment