முதியவர் ஒருவரின் சிறுநீரகத்தில் ஒருதொகை கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் மும்பைப் பகுதியில் நடந்துள்ளது.
75 வயதுடைய குறித்த முதியவர் கடந்த சில மாதங்களாக அடிவயிற்றில் ஏற்பட்ட தொடர் வலியினால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முதியவரின் வலதுபக்க சிறுநீரகத்தில் 552 கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
இதையடுத்து லேசர் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கற்கள் அகற்றப்பட்டது.
இது குறித்து மருத்துவர் லோகேஷ் கூறுகையில், முதியவரின் சிறுநீரகத்தின் அருகே சிறிய துளையிட்டு லேசர் மூலம் முதலில் பெரிய கற்கள் உடைக்கப்பட்டு, சிறிய கருவிமூலம் அகற்றப்பட்டன.
தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment