காணாமல்போன தமது கணவன்மார்கள் தொடர்பிலான தகவல்களை கோரிய மனைவிமார் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை சார் அதிகாரிகளால் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட சித்திரவதைகள், மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும் விடுதலையின் பின்னரும் தாங்கள் அனுபவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எதிராகப் படையினரும் பொலிஸாரும் அளவுக்கதிகமான வன்முறைகளை பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது. என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘கடந்த வருடத்தில் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம்’ குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 10 வடங்கள் முடிவடைந்த நிலையில் காணாமல்போதல் என்பது இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
கடத்தப்படுதல், காணாமல் போனமை, விடயத்தில் சர்வதேசமும் பாராமுகமாகவேதான் இருக்கிறது. அவர்கள்சார் உறவினர்கள் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் கடந்த வருட காலங்களிலேயே வெளிவந்திருந்தன.
#SexualAbuse #SexualHarrasment #GovernmentEmployee #Office #Torture #Abuse #Corruption #bribe #bribery #CorruptionGovernment #UN #DisappearedPeople #TamilNewsKing
0 comments:
Post a Comment