மோட்டார் சைக்கிள் மற்றும் பாரவூர்தி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறிதுநேரத்தில் சிகிச்சை பயனின்றி சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து மொனராகலைப் பகுதியின் ரன்வெலிகம – சமாதிபுர பிரதான பாதையில் இன்று காலை நடந்துள்ளது.
விபத்தில் மொனராகலையைச் சேர்ந்த திமுத்து லக்மால் என்ற 27 வயது நிரம்பிய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மொனராகலைப் பொலிசார் பாரவவூர்தி சாரதியைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment