சிவனொளிபாதமலைக்குச் சென்ற யாத்திரி ஒருவர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித் யாத்திரி சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.
விடயம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்
பதுளை கெந்தகொல்ல பகுதியை சேர்ந்த 53 வயதுடைய குறித்த நபர்
குடும்பத்தாருடன் சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப பகுதியில் ஏறும் போது சுகவீகமுற்றார்.
அங்கிருந்து நல்லத்தண்ணி பொலிஸாரின் உதவியுடன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. என்றார்.
0 comments:
Post a Comment