இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் மித்ர சக்தி 6 (Mitra Shakthi-VI) என்ற கூட்டு இராணுவப் பயிற்சி இன்று தியதலாவை கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் இடம்பெறவுள்ளது.
பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 120 பேர் பங்கேற்பர். வருடாந்த இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம் இராணுவ தந்திர உபாய அறிவுகள், இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முறைகள், ஆழுருவி நீண்ட தூர உளவு ரோந்துமுறைகள், சிறு குழு நடவடிக்கைகள், காலாட்படை ஆயுதங்களின் பயனுள்ள வேலை, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள், குண்டுகள் தகர்க்க வைக்கும் முறைகள் போன்று விடயங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படவுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக வழிக்காட்டலின் கீழ் இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலானவின் கண்காணிப்பின் கீழ் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபத்திரன தலைமையில் பயிற்சிகள் இடம்பெறும்.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளான கேர்ணல் பார்தசாரதி ரோய், கேர்ணல் சொம்பிட் கோஷ், மேஜர் மன்ஹாஷ் மற்றும் மேஜர் ரோகித் குமார் திரிபாதி நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்தனர்.
பின்னர் இந்த இந்திய இராணுவ அதிகாரிகள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவு தூபிகளுக்குச் சென்று மரியாதை அஞ்சலிகளையும் செலுத்தினர்.
0 comments:
Post a Comment