தேர்தல் பிரசாரத்தின் போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து, மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
எட்வின் வில்சன் என்பவர் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் தடைவிதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதனை விசாரித்த தீர்ப்பாய தலைவர் - நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து, ஒரு வாரத்தில், முடிவெடுக்க உத்தரவிட்டது.
#NationalGreenTribunal #Plastic #Election2019 #ElectionCommision #IndiaElection #PrimeMinister #BJP #DMK #ADMK #NarendraModi #NewDelhi #DelhiNews #TamilNewsKing
0 comments:
Post a Comment