நடிகர் அஜித் பொதுவாகவே வசனங்களை கொஞ்சம் இழுத்து நிதானமாக பேசுவார் என்ற விமர்சனம் உண்டு.
இந்த விமர்சனத்தை தற்போது நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் உடைத்து எறிய இருக்கும் அஜித் பிங்க் ரீமேக்கான இந்தப் படத்தில் வக்கீலாக நடிக்கிறார்.
அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்காக, அஜித் நீதிமன்றத்தில் போராடி அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வாங்கித் தருவதுதான் படத்தின் கதை.
படத்தில் நீதிமன்ற காட்சிகள் ஏராளமாக உள்ளது. ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் உள்ள நீதிமன்ற அரங்கில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
இதில் வரும் நீளமான வசனங்களை மனப்பாடம் செய்யாமல் உதவி இயக்குநரை வாசிக்கச் சொல்லி கேட்டு மனதில் நிறுத்திக் கொண்டு பேசி அசத்தினராம் அஜித். அவரது வசன உச்சரிப்பு ஸ்டைலே வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள்.
திட்டமிட்ட காலத்தை விட நான்கு நாள்கள் முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது.
அதில் அஜித், வித்யாபாலன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது. படத்தை மே- 1 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment