அக்கரைப்பற்று பகுதிகளில் கடந்த இரு தினங்களாக சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட எட்டு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வழிகாட்டலின் கீழ் பல்லின குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபர்களான சாரதிகளைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களான சாகாம், கண்ணகிபுரம், ஒலுவில் ஆகிய பகுதிகளில் ஆற்று மண் மற்றும் கடல் மண் அகழ்வில் ஈடுபட்டோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களில் சிலர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மண் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், டிப்பர் வாகனம் ஒன்றும், சிறய ரக கென்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றியமை மற்றும் நிபந்தனைகளை மீறிய வகையில் மணலை ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றங்களின் அடிப்படையிலேயே சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment