குளவிகளின் அச்சத்தால் தரையிலிருந்து மாணவர்கள் பரீட்சை எழுதிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நடந்துள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் ஆறு, ஏழு மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பில் இரு பெரிய குளவிக் கூடுகள் காணப்படுகின்றன.
இதனால் பரீட்சைக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளை விட்டு வெளியேறி நிலத்தில் இருந்து மாணவர்கள் பரீட்சை எழுதினர்.
பதட்டத்துடனேயே மாணவர்கள் பரீட்சை எழுதியதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பாடசாலைலயில் தொடர்ந்தும் குளவி மற்றும் குரங்குகளின் தொல்லைகள் மிக அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment