வெளியானது உறியடி டீசர்

உறியடி  படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் விஜய்குமார். உறியடி சுமாரான வெற்றியைப் பெற்றாலும் பல தரப்பினருடைய பாராட்டைப் பெற்ற படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. 

விஜய்குமார் ஹீரோவாகவும், கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்போது சமூகத்தில் நிலவும் சாதிப்பிரிவினை பிரச்னையை தான் உறியடி 2 பேசப்போகிறது. 

36 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இன்று வெளியானது. 

"சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம், சகலமும் அவலமாகும், மனித தன்மை கேள்விக்குறியாகும், பொறுமைகாத்தால் உடமை பறிப்போகும், உரிமைக்காக போராடுவதே நமது கடமை, அரசியலில் நாம தலையிடணும், இல்லைன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில் தலையிடும்" என பவர்புல் வசனம் இடம் பெற்றுள்ளது.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த டீசர், சமூகவலைத் தளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment