யாரைப் பற்றியும் கலைப்படாமல் தனக்கு தோன்றியதை மட்டுமே செய்யக்கூடியவர் சிம்பு. எப்போ எப்படி நடந்து கொள்வார் என்பதை ஊகிக்க முடியாது. சமீபத்தில் அப்படி ஒரு வேலையைத் தான் சிம்பு செய்திருக்கிறார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அவரை கதாநாயகனாக வைத்து மாநாடு என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்ட இப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்த சிம்பு, திடீரென சுந்தர்.சி இயக்கிய வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடிக்கப்போனார்.
பின்னர் மாநாடு படத்துக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. உடம்பைக் குறைக்கப் போவதாக சொல்லிவிட்டு லண்டன் போய்விட்டார். அங்கிருந்தபடியே ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் நடிக்கப்போகிறார்.
அந்தப் படத்தை முடித்த பிறகு ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிம்பு.
0 comments:
Post a Comment