விதார்த்-ஜானவிகா நடித்துள்ள புதிய படம் ஆயிரம் பொற்காசுகள். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசை அமைக்கிறார். புதுமுக இயக்குனர் ரவிமுருகயா இயக்குகிறார்.
இது கிராமத்து காமெடிப் படம். விதார்த்தும், பருத்திவீரன் சரவணனும் வெட்டி ஆபீசர்கள். அரசு திட்டத்தில் கழிப்பிடம் கட்டுவதாக சொல்லி ஏமாற்றித் திரிகிறவர்கள். ஒரு முறை ஒரு கழிப்பிடத்திற்கு பள்ளம் தோண்டும்போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் கொண்ட புதையல் கிடைக்கிறது. இதை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
இந்த விடயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கே தெரிய வருகிறது. கடைசியில் அந்த புதையல் யார் கைக்கு செல்கிறது என்பதை காமெடியாக சொல்லும் படம்.
சரவணன் நடித்த கேரக்டரில் வடிவேலு தான் நடிப்பதாக இருந்தது. அவரால் நடிக்க முடியாமல் போகவே சரவணன் நடித்தார்.
0 comments:
Post a Comment